பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல பாடல்களுக்கு கொரியோகிராபி செய்துள்ளார். குறிப்பாக தமிழில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே மற்றும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமதி ஹபிபோ உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராபி செய்துள்ளார். இவர் மீது தற்போது 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார். இந்தப் பெண் நடன கலைஞர் காவல் நிலையத்தில் ஜானி மாஸ்டரின் நடன குழுவில் பணியாற்றிய போது மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தளங்களில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது ராய் துர்காம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் பாலியல் வழக்குகளில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல ஜானி மாஸ்டர் மீதும் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு நடன கலைஞர் சதீஷ் என்பவர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் வரை சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.