நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரைப்பட உலகில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. புஷ்பா 1 திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து சுமார் ஐந்து ஆண்டு படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்காக பல்வேறு இடங்களுக்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று வருகிறார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரில், பிரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை “ஆர்மி” என்று அழைத்தார். ஆர்மி என்ற வார்த்தை கௌரவமான ராணுவ வீரர்களை குறிப்பதாகும். அவர்கள் நம் நாட்டை பாதுகாப்பவர்கள். அவர்களை குறிப்பிடும் வார்த்தையை நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களை குறித்து அழைக்கக்கூடாது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் எந்தவித தகவலும் வெளிவரவில்லை. இது மாதிரியான செயல்கள் மூலமாகவே படத்திற்கு பெருமளவு பிரமோஷன்கள் ஏற்படுகிறது.