இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ரயில் பயணங்களை அதிகமாக தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் புகார்கள் அதிகரித்து வருகிறது. அதாவது ரயில்களில் அதிகரித்து வரும் கூட்டம் டிக்கட் இல்லாமல் பயணிகள் ஏறுவது மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது போன்ற புகார்கள் எழுகின்றது. இந்த புகார்கள் பொது பெட்டிகளில் மட்டுமல்லாமல் தற்போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டைகளிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
11123 GWL BJU EXPRESS Sleeper Ka hal Genral Se Bhi Kharab Hai
01. Mera seat dusre passenger ke pas occupied hai maine TTE Sir ko request Kiya ki mera seat khali karva dijiye lekin abhi bhi mera seat khali nahi kiya gya hai. @RailMinIndia @narendramodi @RailwayNorthern pic.twitter.com/7zX0khnwBO
— sandipsingh kushwaha (@ksandip_09) August 5, 2025
அதாவது குவாலியர் பரூணி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பொதுப்பெட்டியைப் போல கூட்டம் அதிகமாக இருப்பதையும், மக்கள் நிற்கயிடம் இல்லாமல் ஒரு பயணியின் உறுதி செய்யப்பட்ட இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்திருப்பதையும் பார்க்கலாம். இது குறித்து அந்த பயணி டிடிஇ இடம் புகார் அளித்ததாகவும் ஆனால் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
