ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், சென்னையில் இருந்து மதுரைக்கு வர ரோட்ல வண்டி எல்லாம் ரிட்டன் ஆகிட்டு இருந்துச்சு.  மதுரையில மூணு மணிக்கு லோக்கல்ல இருக்கின்ற கூட்டம் வந்தா போதும் என சொன்னாங்க. சாப்பாடு புளியோதரை,  சாம்பார் சாதம் தான். அறுசுவை உணவு இல்ல.

ஓபிஎஸ் ஐயாவுடைய மாநாட்டுக்கு நம்மளுடைய தம்பி ஜெயப்பிரதீப் , சப்பாத்தி சுடச்சுட போட்டு…  ஹைஜினிக்காக கொடுத்து….  தண்ணி பாட்டிலோடு கொடுத்து…  ஒவ்வொரு தொண்டனுடைய உணர்வையும், உணவையும் மதித்தவர். நமது தலைவர் அவர்கள். அதனால் தான் இந்த மாநாடு எப்படி நடத்தணும்ன்றதுக்கு முன் உதாரணம் கொடுத்தாங்க ?

தலைவர் சொன்னாரு…  அம்மா மாநாடு எப்படி நடத்தனும்னு எங்களுக்கெல்லாம் பாடம் கற்பிச்சுருக்காங்கன்னு. அங்க இருக்குற யாருமே பாடங்களை படிக்கவில்லை. எல்லாமே கத்துக்குட்டி. எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநாடு நடத்தி இருக்காரா ?  அம்மா உயிரோடு இருந்தவரை ஒரு மாநாடு நடத்தி இருக்காங்களா..?

அண்ணன் சோழமண்டல தளபதி முதல்முறையா திருச்சில நடத்துறாங்க… 2010இல் அந்த மாநாடு தான் திருப்புமுனை மாநாடு. அப்பதான் அந்த மாநாட்டில் சொன்னாங்க….  கனிமொழிக்கு உங்க ராசா வேணா ராசாவா  இருக்கலாம். எங்களுக்கு வந்து குஜா என்றாங்க. அந்த வார்த்தை இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது, 2011ல் ஆட்சியை புடிச்சிட்டோம்.

அடுத்த மாநாடு ஓபிஎஸ் அண்ணே மதுரையில நடத்துனாங்க. அது தான் மாநாடு. தொண்டர்கள் வெகுண்டெழுந்து,  திரண்டு எழுந்து வந்து,  மிகப்பெரிய ஆர்ப்பரிக்கும் கூட்டம் மதுரையில் இருந்தது. அந்த கூட்டம் கண்டிப்பா..  இன்னைக்கும் மதுரையில் இருக்கு. அந்த தொண்டர்கள் எல்லாம் அண்ணன் ஓபிஎஸ் அவர்களோடு பயணித்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.