திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகான நாட்களில் ஒன்றாகும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஹரியானா மாநிலம் யமுனா நகரை சேர்ந்த இளைஞரை, ஹரித்வாரைச் சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முதல் இரவு அன்று தனது கணவரின் விசித்திரமான நடத்தையை கண்டு மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

முதல் இரவுக்கு அந்தப் பெண் அறைக்கு வந்தபோது, தனது கணவர் மேக்கப் போடுவதை பார்த்தார்.  உடனே அந்தப் பெண் தனது கணவரிடம் கேட்டபோது, அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், ஆண்களை கவர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மறுநாள் தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று இந்த விஷயங்களைப் பற்றி கூறினார். மேலும் இதுகுறித்து அவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.