
இந்தியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பலரும் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் வாழ்வில் புதிய கேப்டனை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா பதவி வகிக்கிறார். இந்த நிலையில் இவருக்கு அடுத்து சிறப்பாக இந்திய அணியை கொண்டு செல்லும் வீரர் ரிஷப் பன்ட் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.
இது குறித்து முகமது கைப் கூறியதாவது, டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு அடுத்து சிறப்பாக விளையாடுபவர் ரிஷப் பண்டு தான். அவர் களத்தில் இருக்கும் பொழுது தான் நியூசிலாந்து அணிக்கு சவாலாக இருந்தார். அவரது பேட்டிங் திறமை அபாரமானது. எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் ரன்களை குவிப்பதில் கவனமாக இருப்பார். எந்த வரிசையில் பேட்டிங் களமிறங்கினாலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு அதிக ரன்கள் பெற்றுக் கொடுப்பார். ரிஷப்பன்ட் ஓய்வு பெறும்போது சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருப்பார். இவ்வாறு முன்னால் கிரிக்கெட் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.