பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கைலான் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் திருமணத்தைத் மீறிய கள்ள உறவு இருந்து வந்துள்ளது.

கள்ளக்காதலன் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், இதைக் கவனித்த கணவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“இனிமேல் என் வீட்டுப் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கக்கூடாது” என கள்ளக்காதலனை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், தனது கள்ளக்காதலியின் துணையோடு கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான்.

அதன்படி, வீட்டிற்குள் புகுந்த கள்ளக்காதலன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கணவனைச் சுட்டுப் படுகொலை செய்தான். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலனுக்காகக் கட்டிய கணவனையே கொல்லத் துணிந்த மனைவியின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.