மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் என்ற இடத்தில் பெண் ஒருவரை, ஷேக் அராபத்(21) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்,  ஷேக் அராபத்தை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த ஷேக்கை மடக்கி பிடித்து கும்பலாக அவரை தாக்கியுள்ளனர்.

அதோடு ஷேக்கை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இந்த தாக்குதலை தடுப்பதற்காக ஷேக்கின் தாயார் வந்தபோது,  அவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உட்பட 10 பேர் கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.