பிரபல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன். இவர் கடந்த வருடம் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜோடி ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த தி லெஜன்ட் திரைப்படத்தை சரவணன் அவரே தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுதாலா, விவேக், ரோபோ சங்கர், பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் நேற்று ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தற்போது தி லெஜன்ட் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த தகவலை லெஜெண்ட் சரவணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Legend storms Hotstar as No.1⚡️ 💥💫✨
A New Era has started!
▶️ https://t.co/i14CM9CUHQ #Legend streaming in @DisneyPlusHS #Tamil #Telugu #Malayalam #Hindi @yoursthelegend #Legend #TheLegend #LegendSaravanan @DirJdjerry @Jharrisjayaraj @thinkmusicindia @onlynikil #NM pic.twitter.com/SknO6JiGFw
— Legend Saravanan (@yoursthelegend) March 4, 2023