
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26). இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். இந்த நிலையில் தசரா வர உள்ளதால், செந்தாதேவி கணவரிடம் புதிய சேலையை வாங்கி கேட்டுள்ளார். ஆனால் சேலை வாங்கித் தர அவரது கணவர் மறுத்துள்ளார்.
சேலை வாங்கி தராததால் மனம் உடைந்த செந்தாதேவி நேற்று ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையின விரைந்து சென்று செந்தாதேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செந்தாதேவி தற்கொலை தான் செய்துள்ளாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.