ஜெய்ப்பூர் மாவட்டம் கார்தானி பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில், ஓட்டுநராக பணியாற்றி வந்த பங்கேஜ் குமாவத் (36) என்பவர், தனது கர்ப்பிணி மனைவி சுனிதா (33) மற்றும் மாமியார் மது (55) ஆகிய இருவரையும் சுத்தியலால் தாக்கி கொலை செய்த பிறகு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கார்தானி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சவாய் சிங் கூறுகையில், “திங்கட்கிழமை மாலை பங்கேஜ் தனது மனைவியின் தலையில் சுத்தியலால் தாக்கினார். இதைக் கண்ட அவருடைய மாமியார் மது தடுக்க நடுவில் வந்ததும், அவரையும் தாக்கினார். இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பின்னர், அவர் 9 வயது மகன் யஷ் மீது தாக்க முயன்றார்.

ஆனால் யஷ் மற்றும் அவரது ஹிமாங் என்பவரும் வெளியே ஓடி சென்று அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் பங்கேஜ் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்” என்றார்.

மூவரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலைமையால் மன உளைச்சலில் இருந்ததாலே பங்கேஜ் இந்த பயங்கர நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது