டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியானதில் இருந்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள லியோ படத்தில் இணைந்துள்ள நட்சத்திர பட்டாளத்தின் சுவாரஸ்ய நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் இடம் பெற்றதை அடுத்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அண்மையில் அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் படங்களை பார்த்த ரசிகர்கள் படத்தின் கதாபாத்திரத்திற்கு சஞ்சய் பிரத்யேக உடற்பயிற்சி ஏதேனும் மேற்கொள்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.