
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
வேலை நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.