ஐரோப்பிய யூனியன் நிதி உதவி பெற்ற கோபர் நிக்கஸ் காலநிலை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2025 ஜனவரி மாதம் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் “லா நினோ”என்ற வெப்பநிலையை தணிக்க கூடிய வளிமண்டல போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்த ஒரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக பதிவானது. ஆனால் இதனை முறியடித்து ஜனவரி 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அதிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1991 முதல் 2000 வரையிலான ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட ஜனவரி 2025 ஆம் ஆண்டு சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.