செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த கடையை விரைவிலே மூடுவோம்…..

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்க கூடிய ஒரு நாடு என்று சொன்னால்,  அது இந்திய நாடு தான்.  அப்படி உலகத்திற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக….  உலக அரங்கிலே வல்லரசு நாடாக மாறி கொண்டிருக்கின்ற…..

பொருளாதாரத்திலேயே மேம்பாடு அடைந்திருக்கின்ற நாடகம் மாற்றுகின்ற பாரத பிரதமருக்கு வேலூர் நாடாளுமன்ற மக்கள் கொடுக்க வேண்டிய பரிசு,  இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்து,  பாரத பிரதமரை மீண்டும் பிரதமராக….  மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று புதிய நிதி கட்சியின் சார்பிலே வேலூரில் இருக்கின்ற அத்துணை நாடாளுமன்ற மக்களையும்,  மகளிரையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.