பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.