துபாய் என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும் அந்த வகையில் துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா செல்வதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை கூறி இருக்கிறது. அந்த வகையில் அந்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் மிகவும் முக்கியமானது உலகின் உயரமான கட்டிடம் என கூறப்படும் புர்ஜ் கலிபா தான்.

அந்த வரிசையில் தற்போது “அட்லாண்டிக் தி ராயல்” என்ற நட்சத்திர விடுதியும் இடம் பிடித்துள்ளது. இந்த விடுதியில் உள்ள நுழைவு வாயில் முதல் குளியல் அறையில் இருக்கும் பொருட்கள் வரை அனைத்துமே உலகின் விலை உயர்ந்தவை என்று கூறப்படுகின்றது. இங்கு தங்குவதற்கு ஒரு நாள் வாடகை சுமார் ரூபாய் 82 ஆயிரத்திலிருந்து 82 லட்சம் வரை வசூலிக்கப்படுகின்றது. இதனால் தற்போது இதுதான் உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதி என்று கூறப்படுகின்றது.