
தவெக கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பேரை மட்டும் சொன்னா பத்தாது செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சியின் பெயர் என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சி தானே.
அடுத்த வருஷம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. அது தவெக மற்றும் திமுக இடையே தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கட்சியில் நாங்கள் உழைக்கிறோம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்று எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.