மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை பாரதிய ராட்டிர சமிதி கட்சி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்தியா மற்றும் சர்வதேச சரக்கு ரயில்களின் சராசரியை ஒப்பிட்டு அவர்களுடன் எப்படி போட்டி போட முடியும் என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா ஜோக் இன் இந்தியாவாக மாறிவிட்டது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.