நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம் கரடியை பிடித்து செல்லுமாறு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வனத்துறையினர் கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று கரடி கூண்டில் சிக்கிக்கொண்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கரடிக்கு மயக்க ஊசி அதனை அங்கிருந்து எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர். மேலும் நீண்ட நாட்களாக பயமுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.