
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் இளம் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் ரசிகர்களுடனான கேள்வி பதில் உரையாடலில் நடிகர் பிரபாஸ் குறித்து பேசி இருந்தார். இவர் தற்போது தமிழில் கார்த்திக் நடிக்கும் சர்தார் 2, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயப்பூர்வம்’ மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் ஆகிய படங்களில் நடித்த வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார், அப்போது அவர் கூறியதாவது பிரபாஸுடன் நடித்த அனுபவம் அனுபவம் அவரைப் பற்றி தனது பார்வை முற்றிலுமாக மாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது பிரபாஸ் சாரை சந்திப்பதற்கு முன் அவருடைய நேர்காணல்களை பார்த்து இருக்கிறேன்.
அப்போது அவர் மிகவும் அமைதியாக அதிகம் பேசாத ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் அவரை நேரில் சந்தித்தபோதுதான் அவர் அற்புதமாக பேசக்கூடியவர் மிகவும் வேடிக்கையானவர் என்று தெரிந்தது. அவரை சுற்றி எப்போதும் உற்சாகம் இருக்கும் என்று கூறினார்.