ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அண்மையில் விமானத்தில் தனது மரியாதைமிக்க நடத்தை மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் சமூக ஊடகக் குழு விமானத்தில் ஒரு வீடியோ எடுத்தது. அப்போது, கேமராமேன் எங்கு அமர என்று நினைத்துக்கொண்டே சென்ற போது, இங்கு அமருங்கள் என்று வைபவ் சூர்யவன்ஷி தனது இருக்கையை பகிர்ந்துக்கொண்டார்.

 

இதை ஆங்கிலத்தில் மிக எளிமையாகவும் அன்போடும் கூறிய வைபவ், “You can sit with us bro,” என சொல்வது அவரது அழகிய மனதை வெளிப்படுத்தியது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி, ரசிகர்கள் அவரை பாராட்ட தொடங்கியுள்ளனர்.

தனது 14வது பிறந்த நாளை ஐபிஎல் போட்டிக்குள் கொண்டாடிய வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது மூன்றாவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் விளாசினார்.

இதில் அவர் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை திருப்திப்படுத்தினார். 15.5 ஓவர்களில் 210 ரன்கள் என்ற இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி, வைபவ் இன் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நிச்சயமாக்கியது. இளமையிலேயே சதம் அடித்த இந்த சாதனை வீரர், உலக அளவில் மிகப்பெரிய சாதனையாளராக வெளிப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக வைபவ் சூர்யவன்ஷியின் நடத்தை மற்றும் ஆட்டம் தான் அணியின் பெருமையாக விளங்கியுள்ளது. 14 வயதில் மூன்று ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறார் என்றதோடு மட்டுமல்லாமல், தன்மானத்திலும் முன்நின்று காட்டுகிறார்.

வெறும் ஒரு வீரராக மட்டுமல்லாது, நல்ல மனிதராகவும் அமைந்துள்ள அவர், இந்த இளவயதிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். கிரிக்கெட்டின் தரநிலையை உயர்த்தும் வகையில், இத்தகைய நடத்தை மற்ற இளம் வீரர்களுக்கும் சிறந்த உதாரணமாக இருக்கிறது.