ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த மாதுரி தீட்சித், ஒரு படத்தில் நடித்த போது அதன் ஹீரோ தனது உதட்டில் கடித்த சம்பவத்தை அவர் தற்போது நினைவு கூர்ந்தார். மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தில் கமலஹாசன் சரண்யா ஜோடியாக நடித்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதன் இதன் ஹிந்தி ரீமேக் தாயாவான் படம் 1988 வெளியானது.

இதில் கமலஹாசன் வேடத்தில் வினோத் கண்ணாவும், சரண்யாவிடத்தில் மாதிரி தீட்க்ஷித்தும் நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரித்து இயக்கியவர் நடிகர் பெரோஸ் கான். காட்சிபடி வினோத் கண்ணாவும், மாதுரியும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது வினோத் கண்ணா அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இயக்குனர் கட் சொன்ன பிறகும் மாதிரியுடன் நெருக்கமாக நடித்து அவரது உதட்டை பலமாக கடித்திருக்கிறார்.

இதனால் அவரது உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஷார்ட் முடிந்ததும் கண்ணீர் விட்டபடி அங்கிருந்து ஓடினார். அதன் பின் இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க கோரி பெரோஸ் கனாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர் நீக்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பேசிய சம்பளத்திலிருந்து பல மடங்கு தொகை கொடுத்து பிரச்சினையை முடித்தார். இதில் அவருக்கு 15 லட்சம் ரூபாய் பேசப்பட்டிருந்தது. ஆனால் இயக்குனர் ஒரு கோடி ரூபாயை வீசி எரிந்துள்ளார்.