குஜராத் மாநிலத்தில் அம்ரெலி மாவட்டத்தில் பண்ணையில் வேலைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த விவசாய தம்பதியினர் தங்களது 7 குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பண்ணையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளர் காரில் 4 குழந்தைகள் விளையாட ஏறி உள்ளனர். காரின் கதவு மூடியதை கவனிக்காத குழந்தைகள் காரின் உள்ளே சிக்கி மூச்சித் திணறி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அந்த குழந்தைகள் 2 முதல் 7 வயது உடையவர்கள்.

மாலை வேலை முடிந்து வந்த பெற்றோர்கள் குழந்தைகளின் சடலங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து சென்ற காவல்துறையினர் காரில் உள்ள குழந்தைகளின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.