
தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான தலை வெட்டி சந்துரு கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (35) மற்றும் அவருடைய சகோதரர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இதில் சுரேஷ் ஜாமினில் வெளியே வந்த நிலையில் நேற்று இரவு தன் மனைவி ராகினியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த இருவர் சுரேஷின் பைக்கின் மீது மோதினர்.
இதில் அவரும் அவருடைய மனைவியும் கீழே விழுந்த நிலையில் திடீரென 4 பேர் அவரை சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் தடுக்க வந்த அவருடைய மனைவிக்கும் காலில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் இது குறித்த தகவலின் பெயரில் திருச்சி காவல்துறையினர் நேரில் வந்து ராகினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் முன்விரோதத்தின் காரணமாக பழிக்கு பழி வாங்குவதற்காக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.