உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நேற்று மதியம் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று திடீரென ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அந்த பெண் பாலத்தின் கீழே தூணில் விழுந்துவிட்டார். வாகனம் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அப்பெண் பாலத்தில் உள்ள ஒரு தூணில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வெகு நேரமாக தூணில் சிக்கித்தவித்த அப்பெண்ணை காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்டனர். அந்தப் பெண் அங்கிருந்து ட்ராலி மூலமாக மீட்கப்பட்டார். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.