
பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் மாகாணத்தில் பாக்தாதி என்ற நகரில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தில் கிட்டதட்ட 40-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை திடீரென இடிந்து சரிந்துள்ளது. அதில் வசித்து வந்தோர் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பெண்கள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
திடீரென அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.