பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை நீக்கம் செய்தது பிசிசிஐ. பிசிசிஐ 2023-24 ஆண்டுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொள்வதை அறிவிக்கிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிசிசிஐ 2023-24 ஆண்டுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொள்வதை அறிவித்தது – டீம் இந்தியா (சீனியர் ஆண்கள்). அதன்படி இந்தியாவின் ஏ பிளஸ் கிரேடு (Grade A+ ) வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு தலா  7 கோடி சம்பளம் பெறுவார்கள்..

அதேபோல இந்தியாவின் ஏ கிரேடு (Grade A) வீரர்களாக ஆர். அஸ்வின், முகமது ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவின் கீழ், வீரர்கள் வழக்கமாக ஆண்டுக்கு ₹ 5 கோடி வரை பெறுவார்கள்

கிரேடு பி பிரிவு (Grade B) வீரர்களாக சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு தலா  3 கோடி வரை ஊதியம் பெறுவார்கள் .

மேலும் கிரேடு சிக்கு 15 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்தது. அதன்படி கிரேடு சி (Grade C) வீரர்களாக ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அனைத்து வீரர்களுக்கும் தலா ₹ 1 கோடி வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் .

கூடுதலாக, குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ODIகள் அல்லது 10 T20I போட்டிகளில் விளையாடுவதற்கான அளவுகோல்களை சந்திக்கும் விளையாட்டு வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் தரம்சாலா டெஸ்ட் போட்டியில், அதாவது இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டில் பங்கேற்றால், கிரேடு C-ல் சேர்க்கப்படுவார்கள்.

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இந்த சுற்று பரிந்துரைகளில் வருடாந்திர ஒப்பந்தங்களுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தாத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை நீக்கம் செய்தது பிசிசிஐ. சமீப காலங்களாக இந்திய அணியில் இடம்பெறாத நிலையில் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.