தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

நிலையான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வி வழங்க முடியும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு போட்டி தேர்வு தேவை இல்லை என்பது அனைவரின் நிலைப்பாடு ஆகும். மேலும் அதன் அடிப்படையில் ஆசிரியர் காலி பணியிடங்களில் நிரப்பு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.