நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அளவற்ற தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல்தினத்தின் மையக்கருவாக  “மீண்டும் மஞ்சப்பை” நெகிழி மாசு ஒழிப்பு இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப் போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.