நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.