தமிழ்நாடு சிமெண்ட்ஸ் எனப்படும் டான்செம் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருப்பவர் சி‌. காமராஜர் ஐஏஎஸ். இவருடைய சிறப்பான நிர்வாக திறமையின் காரணமாக தற்போது டான்செம் வருவாய் ஆயிரம் கோடியை நெருங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் பணியாற்றிய காமராஜ் ஐஏஎஸ் எம்பிஏ படித்தவர். அதன் பிறகு இந்திய ஆட்சி பணியில் அமர வேண்டும் என்ற ஆசையில் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய காமராஜ் ஐஏஎஸ் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சிமெண்ட் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய சிறப்பாக நிர்வாக திறமையின் காரணமாக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் வருவாய் 17 லட்சத்து 97 ஆயிரத்து 389 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. குறிப்பாக லாபமாக ஈட்டிய வருவாய் மட்டுமே 156 கோடியே 42 லட்சம் ரூபாய் என்கிறார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு சிமென்டஸ் வருவாய் ஆயிரம் கோடியை நெருங்கும் என்று கூறுகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் புதிய உச்சம் தொட்டுள்ளதாக தொழில்துறை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இவர் புதிதாக தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றி உள்ள டிஆர்பி ராஜாவுடன் சேர்ந்து இன்னும் சிறப்பாக செயல்பட்டு இன்னும் பல கோடிகளை லாபமாக ஈட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.