மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பொருளாதார வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை தமிழ்நாடு மக்கள் சார்பில் மனப்பூர்வமாக ஏற்கிறோம். பிரதமரின் முடிவுகள் எப்போதும் சாதாரண மக்களின் நலனுக்காகவே இருக்கும் என்பதை இந்த அறிவிப்பு உறுதியாகியுள்ளது.

திமுக அரசை பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் நவீனமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகனும் மருமகனும் 30000 கோடி ரூபாயை வருமானமாக ஏற்றி உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவரை தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூலம் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே 2000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை வங்கியில் கண்காணிக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.