2024 ஜனவரி முதல் வாரத்தில் உயர்கல்வித்துறைக்கு புது அமைச்சர் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அமைச்சரவை மாற்றமும் இருக்கும். கேபினட்டை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்போது சில துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு,  ஒரு சில பேர் புதிய அமைச்சர்களாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மஸ்தான் அமைச்சராக இருந்தார். பொன்முடி அமைச்சராக இருந்தார். தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரே அமைச்சர் என்ற நிலை வந்திருக்கிறது.

வட மாவட்டங்களில் அமைச்சருடைய பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது என்ற ஒரு பேச்சும் இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களே இல்லாத ஒரு நிலையாக இருக்கிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஒருவர் வரக்கூடிய நாட்களில் அமைச்சராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உயர் கல்வித்துறையை கூடுதல் பொறுப்பாக கவனிக்க முடியாது. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால்,  2006 ஆம் ஆண்டு உயர்நிலைத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அதிமுக ஆட்சியில் கேபி அன்பழகன் இருந்தாரு. பழனியப்பன் 2011ல் இருந்தாரு.  எனவே இந்த பெரிய சப்ஜெக்ட். தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன.

அரசு கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்,  தனியாக ஒரு அமைச்சர் போட்டால்தான் டே டூ டே  அப்டேட் பார்க்க முடியும். அடுத்த மாதம் தமிழக அமைச்சரவையில் புதிதாக சிலர் சேர்க்கப்பட்டு,  சிலர் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றன.  அந்த அடிப்படையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் விரைவில் உயர் கல்வித்துறை பொறுப்பை கவனிப்பார்.

அதற்கான கோப்புகள் தயாராகி வருகின்றன. அவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறையில் இருந்து கூடுதலாக உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.   2021இல் dmk ஆட்சி வந்த போது ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.  ஓராண்டுக்கு பிறகு அவருக்கு அந்த துறையில் சில விமர்சனங்கள் எழுந்ததன் அடிப்படையில்  சிவசங்கருக்கு போக்குவரத்துறை வழங்கப்பட்டடு,

ராஜகண்ணப்பனுக்கு bc, mbc துறை ஒதுக்கப்பட்டது. தற்போது அமைச்சர்  ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கியமான மூன்று துறைகளை வைத்திருந்தவர் ராஜகண்ணப்பன். மின்சாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளை  வகித்தார் ராஜகண்ணப்பன்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரத்திடம் சிவகங்கை தொகுதியில் தோல்வியை தழுவினார்.  பா. சிதம்பரத்துக்கும் அவருக்கும் கடும் போட்டி 2009 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது.  ராஜ கண்ணப்பனுக்கு நீண்ட நெடிய வரலாறு  உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தமிழக அரசியல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும்….  அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.