சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட உடன், நீதிமன்றத்திலேயே பொன்முடி மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு கதறினார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாக ஐகோர்ட் அறிவித்துள்ளது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உயர்க்கல்வித்துறை அமைச்சர், எம்எல்ஏ ஆகிய பதவியையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இழக்கிறார். இதன் மூலம் தண்டனை காலம் 3 ஆண்டுகள், அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு என மொத்தமாக அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.