
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை சுந்தரி சீரியல் துணை நடிகை எஸ்தர் என்ற மீனா போதை பொருள் கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் 5 கிராம் அளவு ‘மெத்தம் பொட்டமைன்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கைது செய்யப்பட்ட நடிகையிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் துணை நடிகை போதைப்பொருள் வாங்கியது குறித்து விசாரிக்கப்பட்டது.
இதில் அவரது நண்பர் தாமஸ் என்பது தெரிய வந்தது. தொலைபேசி வாயிலாகவே போதைப்பொருள் கடத்தல் நடத்தப்பட்டதால் தாமசை சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு தேடி வருகின்றனர். இதன்படி துணை நடிகை எஸ்தர் என்ற மீனா தற்போது 15 நாட்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் வைக்க பட்டுள்ளார். மேலும் இவரிடம் போதைப்பொருள் கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத…