சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்பு கைப்பற்றப்பட்ட கஞ்சாவை பெரிய மேடு காவல் நிலையத்திற்கு  போலீசார் எடுத்துச் சென்றனர். இந்த கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பதை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.