
முன்னணி நடிகரும் இயக்குநருமான மனோஜ்குமார் காலமானதைத் தொடர்ந்து, அவரை நினைவுகூரும் பிரார்த்தனைச் சபை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில், பிரபல நடிகை ஜெயா பச்சன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது, இரு வயதான ரசிகர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்தது சில நிமிடங்கள் பதட்டமாக மாறியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில் ஜெயா பச்சன் ஒரு பெண் குழுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு வயதான பெண் ஒருவர் அவருடைய தோளைத் தட்டினார். அதே நேரத்தில் அந்த பெண்ணுடன் வந்த ஒருவரும் கைபேசியில் புகைப்படம் எடுக்க முயற்சித்தார்.
View this post on Instagram
ஜெயா திரும்பி பார்த்தபோது, அந்த பெண் அவரிடம் கை கொடுக்க முயன்றதாலும், புகைப்படம் எடுக்க முயற்சித்ததாலும், ஜெயா அதிருப்தியுடன் அந்த கையைத் தள்ளி விட்டு புகைப்படம் எடுக்க முயன்ற நபரை கடுமையாக கண்டித்தார்.
இந்நிகழ்வு இணையத்தில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஜெயாவின் நடத்தை வருந்தத்தக்கது எனக் கூறினாலும், பெரும்பாலானவர்கள் ஜெயாவை ஆதரித்து, இரங்கல் நிகழ்வில் புகைப்படம் கேட்பது முறையல்ல எனக் கூறியுள்ளனர்.
“இது ஒரு இரங்கல் நிகழ்வு, புகைப்படம் எடுப்பதற்கான இடமல்ல” என ஒருவர் கருத்து தெரிவித்தார். “இப்படி நடந்தவர்கள் நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், இப்போது ஜெயா சரியாக நடந்துகொண்டார்” என இன்னொரு பயனர் எழுதினார். மனோஜ்குமாரின் பிரார்த்தனைச் சபையில் அமீர் கான், நேயில் நிதின் முகேஷ், ஃபர்ஹான் அக்தர், ஈஷா டியோல், சோனு நிகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.