உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஹஸ்ரத் அலி என்ற நபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணம்,   அலியின் மருமகள் அவர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி, இந்த விஷயத்தை  தீர்த்து வைக்க ₹10 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது, அந்த தொகையை அவரால் வழங்க முடியவில்லை. இதனால் விரக்தியில், அலி தூக்கிலிடுவதற்கு முன் விரிவான தற்கொலைக் கடிதத்தை எழுதி உள்ளார், அதில் தன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டல் போன்ற காரணமாக அவர் எதிர்கொண்ட பெரும் அழுத்தத்தை கடிதத்தில் எழுதியுள்ளார்.

₹10 லட்சத்திற்கான மருமகளின் மிரட்டல் கோரிக்கை அலியின் ஏற்கனவே குடும்பத்தில் நெருக்கடியான பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது, மருமகளின் குற்ற சாட்டுகளால் அவரது ஊரில் மட்டும் உறவினர்கள் மத்தியில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்க முடியவில்லை. அத்துடன் 10 லட்சம் வேண்டி மிரட்டல் என பலதரப்பட்ட மனஅழுத்தங்கள் அவரை தற்கொலை எண்ணத்திற்கு துண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அலியின் மரணம் தொடர்பான முழுகாரணத்தை அதாவது உண்மையை வெளிக்கொண்டுவர காவலர்கள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.