
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் கிட்வாய் நகர் பகுதியில் நடு ரோட்டில் இளம்பெண் ஒருவர் திருடனை வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மாணவியின் மொபைல் போனை திருடிக் கொண்டு பைக்கில் வேகமாக சென்ற திருடன் ஒரு ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தார்.
இதை அடுத்து அப்பகுதியில் நின்ற போது மக்கள் திருடனை துரத்திப் பிடித்தனர். உடனே தனது மொபைல் போனை வாங்க சென்ற மாணவி நடுரோட்டில் திருடனை செருப்பால் அடித்துள்ளார். மேலும் ஒரு ஆணும் சேர்ந்து அந்தத் திருடனிடம் உன் வீட்டில் சகோதரி யாரும் இல்லையா? என கோபத்தில் அடித்துள்ளார்.
यूपी में चोर की बीच सड़क पर युवती ने की चप्पलों से पिटाई का वीडियो वायरल..!!
कानपुर में मोबाइल लूट कर भागने के दौरान लुटेरों की गाड़ी रिक्शा से टकराने पर पकड़ा गया लुटेरा..!!
फिर मोबाइल लूटकर भाग रहे एक लुटेरों को छात्रा ने बीच सड़क पर चप्पलों से पीटा..!!
एक लुटेरा मौके से… pic.twitter.com/uSl4QweJp8
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) April 19, 2025
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து கான்பூர் நகர காவல் ஆணையரகம் தங்களது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில்,0 இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் மாணவியின் தைரியமும், சுய பாதுகாப்பு மனப்பான்மையும் மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என தெரிவித்துள்ளது.