வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் தனது சக மாணவரை பிளேடால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவருக்கு வயிற்றில் 16 தையல் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பள்ளி மாணவர்களிடையே வன்முறையின் அளவு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கும், அவர்களிடையே நட்பை வளர்ப்பதற்கும் பள்ளிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் மேலும், இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.