தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று அவருடைய 49வது பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சிம்பு நடிக்கும் தக்லைப்  படத்திலிருந்து ஒரு சிறப்பு வீடியோவை அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை மணிரத்தினம் இயக்கும் நிலையில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த வீடியோவில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.