ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் பேச்சுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார் திருச்சி சூர்யா சிவா. இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில் “நான் திமுகவில் பயணித்தபோது எந்த இடத்திலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து பேச வேண்டாம் என உத்தரவிட்டீர்கள். அதற்கு காரணம் என்ன? நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்குனீர்களா என கனிமொழியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.