செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, டாஸ்மார்க் விவகாரத்தில் தமிழ்நாடு தன் உரிமை கழகத்தில் ஒரு கருத்து சொன்னோம். கள்ளச்சாராயம் குடித்து அவனுக்கு 10 லட்சம். சாராயம் காய்ச்சவனுக்கும் சேர்த்து கொடுக்கிற. தூத்துக்குடியில் வேதாந்தா  ஸ்டெர்லைட்டால் எங்களுக்கு சுவாசத்துக்கு கேடு வருகிறது என்று சொல்லி  ஊர்வலம் வந்தவர்களை 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அந்த 13 பேரையும் சுட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று நீதிபதி விசாரணை  கமிஷனில் சொன்னார்.

விசாரணை கமிஷனில் சொன்ன 19 பேரும்,  குறிப்பிட்டு சுட்டவர்கள். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக சுட்டவர்கள். அரசாங்கம் ஒன்றும்  உத்தரவு போடவில்லை. ஸ்டெர்லைட்டுக்காக சுட்டார்கள். அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார் நம்முடைய ஸ்டாலின். கலாச்சாராயம் குடித்துவிட்டு செத்தவனுக்கு 10 லட்சம் கொடுக்கிறார். எனக்கு உரிமை வேண்டும் என்று கேட்டு ஊர்வலம் போனவனுக்கு அஞ்சு லட்சம்,  கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம். ஏனென்றால் குற்ற உணர்ச்சி.

கள்ளச்சாராயம் என்பது நம்முடைய அரசாங்கத்துக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். சிறந்த யோசனை சொல்பவரை தன்னை சுற்றி வைத்துக் கொள்ளாதே. அதனாலதான் உரிமைக்காக போராடிய ஊர்வலம் போனவனுக்கு ஐந்து லட்சம்,  கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு 10 லட்சம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு எங்களுடைய கட்சி ஒரு கருத்து சொன்னது. மதுவிலக்கை ஒழிப்பது தான் எங்கள் கட்சி நோக்கம்.

கள்ளச்சாராயம் எதற்கு குடிக்க போகிறான் என்றால் ? 250 ரூபாய் கொடுத்து குவாட்டர் வாங்க முடியாதவன்,  40 ரூபாய் கொடுத்து கள்ளச்சாராயத்தை குடிக்கின்றான். அவன் 20 ரூபாய் கொடுத்து தென்னங் கள்ளு குடித்துவிட்டு போகிறானே திறந்துவிடு.  நான் நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. தென்னங் கள்ளு நல்லது. தென்னை மரம் விவசாயிகளுக்கு நல்லது. இவ்வளவு பெரிய கேடு இல்லை. இந்த கலாச்சாராயம் நஞ்சு.  40 ரூபாய்க்கு கிடைக்கிறது.  அதுக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும். கள்ளினால் கொடுக்க வேண்டாம்  சாராயத்தை கொண்டு வந்து நாடே சீரழிந்து விட்டது என தெரிவித்தார்.