டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாஜக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் பாஜக தொண்டர்களுடன் வெற்றியை பகிர்ந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தொண்டர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதற்கு காரணம் பாஜக செய்த வளர்ச்சி பணிகள் மட்டும் தான்.

மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு முடிவு கட்டி வருகிறது. அக்கட்சியின் திட்டங்கள் மற்றும் ஓட்டு வங்கியையும் திருடுகிறது. காங்கிரஸுடன் கைகோர்க்கும் கட்சிகளுக்கும் முடிவு நெருங்கி விட்டது. சாதி எனும் விஷத்தை காங்கிரஸ் நாடு முழுவதும் பரப்பி வருகிறது. தேர்தலில் அக்கட்சி மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்படுகின்றன. இனிமேல் காங்கிரஸை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. 6 தேர்தல்களில் எதிலும் வெற்றி பெறாமல், பூஜ்ஜியம் பெற்று அக்கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர் என்று கூறினார்.