இங்கிலாந்தில் செம்ஸ்ஃபோர்டில் வசிக்கும் தொழில் முனைவோரான சார்லி டே, சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தின் மூலம் தனது தொழிலை தொடங்கியுள்ளார். அதை தனது திறமையின் மூலம் வெற்றியாக மாற்றினார். தற்போது அவர் ‘Sales is Easy’ மூலம் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டி வருகின்றார். அதோட அவர்களுக்கு தேவையான உத்திகளையும் வழங்கி வருகிறார். இவரது பயணம் கடந்த 2011ம் ஆண்டு, அவரது 21ம் வயதில் ஆரம்பித்தார். இவர் குழந்தைகளுக்கான நாடகப் பள்ளியை தொடங்கினார். இதை மேலும் விரிவடைந்து 4 நிறுவனங்களாக வளர்ந்தது. இவரது ஆலோசனை நிறுவனம் மட்டும் மில்லியன் விற்பனையை ஈட்டி உள்ளது. தற்போது தாயாக இருக்கும் சார்லி தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நிதி சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் கூட அவர் நாடகப் பள்ளியை ஆன்லைனில் மாற்றினார். மேலும் தனது வணிகத்தை செழிக்க வைக்க பல விற்பனை திறன்களை பயன்படுத்தினார். இந்த காலகட்டத்தில் இவரோடு சேர்ந்து தொழில் தொடங்கிய சக வணிக உரிமையாளர்கள் அடிக்கடி இவரிடம் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனையை கேட்கின்றனர். இதுதான் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கழகம் என்ற பேஸ்புக் குழுவை தொடங்க உதவியது. இந்த குழுவில் சேர கட்டணம் செலுத்தி பெரும் உள்ளடக்கத்தை பகிர தொடங்கினார். முதல் மாதத்திலேயே இவர் ரூ.26000 பெற்றார். அந்த ஆண்டு இறுதியில் அவரது வருமானம் லட்சத்தை தொட்டது. எளிமையான பின்னணியில் இருந்து வரும் பெண்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். மேலும் தொழில் முனைவராக ஆசைப்படும் இளம் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார்.