வருடம் தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. 10 அணிகளுக்கு இடையே 74 போட்டிகள் நடைபெற உள்ளது.  இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் கடந்த வருடம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஏழு ஐபிஎல் போட்டிகளில் சராசரி ஸ்கோரானது 216 இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் இன்று இரவு நடக்க இருக்கும் இந்த போட்டிக்கான பிட்ச் ஆனது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் களமிறங்கும் அணி 300 ரன்கள் வரை குவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.