என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, 1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை  சுட்டார்கள். இன்றைக்கு தமிழகத்திற்கு அதே விதமான ஒரு அபாயம் வந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் போயிட்டார்கள்..  அதற்கு பதிலாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்ளை கூட்டம் இங்கே வந்திருக்கிறது. ஆங்கிலேயர்களைவிட மோசமாக இருக்கக்கூடிய ஆட்சி என்றால் ?  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆங்கிலேயர்கள் கூட  ஊழல் பண்ணல.

நம்மளோட பணத்தை சுரண்டி,  இங்கிலாந்துக்கு  எடுத்துட்டு போனான். ஆனால் நமக்கு வருகின்ற பணத்தை ஊழல் பண்ணி,  இவர்களுடைய குடும்ப சொத்தாக மாற்ற வேண்டும் என்று நினைக்கக்கூடிய திமுகவை எதிர்த்து,  இங்கிருக்ககூடிய நாம் அனைவருமே வெகுண்டு ஏல வேண்டிய நேரம் இங்கு வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மகான்களுக்கு… இப்படிபட்ட பெரியவர்களுக்கு   உண்மையாக நாம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் ? திமுகவினுடைய ஆணவத்தை அடக்க வேண்டும். முளைச்சி 3 இலை  விடல.. நடிச்சது 6, 7 படம், அதுவும் பிளாப். அப்பா கிட்ட, தாத்தா கிட்ட பணம் இருக்குன்னு திமிரு. அந்தப் பணத்தை வைத்துகிட்டு, 6 படம் நடிச்சிகிட்டு,

இவரு சொல்றாரு… சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.  எவ்வளவு பெரிய திமிரு பாருங்க ? எப்படிப்பட்ட மகான்கள் முத்துராமலிங்க தேவர் ஐயா மட்டும் இப்போ இருந்து இருந்தாருன்னா….  அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவளுக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.