
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்த இருக்கிறார். நடிகர் விஜய் சமீபத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறிய நிலையில் ஓணம் பண்டிகை உட்பட அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. இதனால் தமிழக அரசியலில் என்ன மாதிரியான கொள்கைகளை விஜய் கடைப்பிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல் மாநாட்டில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் தன்னுடைய x பக்கத்தில் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன்பாக நெற்றியில் குங்குமம் வைத்தபடி புகைப்படம் வைத்திருந்த விஜய் தற்போது அதனை நீக்கி விட்டு கட்சியின் கொடி வைக்கப்பட்டு விஜய் கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெற்றியில் குங்குமம் இட்டபடி சிரித்த முகத்துடன் இருந்த விஜயின் புகைப்படம் தற்போது மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாததற்கு பாஜகவினர் விஜயை விமர்சித்து வருகிறார்கள். இதில் தற்போது பொட்டு வைத்த புகைப்படத்தை நீக்கியதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.