தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியோர் இல்லத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.